சினிமா

காஷ்மீரில் லோகேஷ் கனகராஜ் உடன் செல்ஃபி எடுத்த பிரபல யூடியூபர்! இவரும் லியோவில் இருக்காரா?

Published

on

லியோ படத்தில் இன்னும் யாரெல்லாம் இணையப் போறாங்க, எத்தனை நடிகர்கள் நடிக்கும் படமாக லியோ படம் உருவாகி வருகிறது என்பதே பெரிய குழப்பமாக இருக்கிறது.

புதிது புதிதாக ஆட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு லோகேஷ் கனகராஜ் எத்தனை ஏஜென்ட்டுகளை நமக்கு காட்டப் போகிறார் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

#image_title

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றால் பிரியாணி இல்லாமலா என்பது போல சமீப காலமாக யூடியூபர்களும் இணைந்து வருகின்றனர்.

ஹோட்டல் ஹோட்டலாக சென்று பல உணவுகளை சுவைத்து நமக்கு பசியைத் தூண்டும் பிரபல இர்ஃபான் வியூ யூடியூப் சேனலை நடத்தி வரும் இர்ஃபான் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், லியோ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விஜய் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஏற்கனவே விருது விழா நிகழ்ச்சியில் கமலுக்கு பிடித்தமான யூடியூப் சேனல் என இர்ஃபான் வியூ யூடியூப் சேனலுக்காக இர்ஃபானுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இர்ஃபான் செல்ஃபி எடுத்துள்ள நிலையில், லியோ படத்திலும் இர்ஃபான் இணைந்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version