கிரிக்கெட்

இந்திய அணி அவரை கவனிக்கவில்லை, நாங்கள் கேப்டன் ஆக்குகிறோம்: அயர்லாந்து அறிவிப்பு!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக மாற்ற தயார் என அயர்லாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் என்பதும் அவரது ஆட்டம் இந்திய அணியை கவர்ந்ததை அடுத்து அவர் இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய சஞ்சு சாம்சன் அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த அவர் டெல்லி அணிக்கு மாறி அதன் பின் மீண்டும் தற்போது ராஜஸ்தான் அணியில் உள்ளார். இந்தநிலையில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாட போதுமான வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து அயர்லாந்து அணி தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவர் கூறியபோது அயர்லாந்து கிரிக்கெட் அணி சஞ்சு சாம்சனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் கொடுக்கும் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் சஞ்சு சாம்சன் எங்கள் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எங்கள் அணியில் சஞ்சு சாம்சன் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் விளையாட அனுமதிப்போம் என்றும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் மட்டுமின்றி அரிய திறமைசாலிகளில் ஒருவர் என்றும் அவர் எங்கள் அணியின் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பை வழங்கு கிறோம் என்றும் எங்கள் அணிக்கு அவரைப் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்டிங் செய்பவர் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணி அவரை சரியாக கவனிக்கவில்லை என்றால் அவர் எங்களுடன் சேரலாம் என்றும் அவரை நாங்கள் மதித்து வரவேற்கிறோம் என்றும் அயர்லாந்து அணி கிரிக்கெட் தலைவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version