இந்தியா

இனிமேல் ரயில் பயணத்தின்போது இதை செய்ய முடியாது.. புதிய விதிகள் அமல்!

Published

on

ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான பொதுமக்களின் கருத்து என்பதும் தெரிந்ததே.

ரயில் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரவில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை வசதியை ரயிலில் உண்டு என்பதால் ரயில் பயணமே சிறந்தது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் சிலர் சில செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது ரயில்வே துறை புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின் படி உங்கள் இருக்கையின் அருகில் உள்ளவர்கள் அல்லது ஒரே பெட்டியில் உள்ளவர்கள் மொபைல் ஃபோனில் உரத்த குரலில் பேசினால் அல்லது பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சத்தமாக பாடல்களை கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் ரயில் பயணத்தின் போது சத்தமாக பேசுவதாகவும் இரவில் மின் விளக்குகளை எரிய வைப்பதால் தூக்கம் கெடுகிறது என்றும் பலர் ரயில்வே வாரியத்துக்கு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசினாலோ அல்லது பாடல்களை அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக கேட்டாலோ அந்த பயணிகள் மீது புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகாரை உடனடியாக தீர்க்கும் பொறுப்பு அந்த ரயிலில் உள்ள ரயில்வே ஊழியருக்கு உண்டு என்றும் ரயில்வே துறை புதிய விதியை அமல் படுத்தி உள்ளது.

இந்த விதி காரணமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கூடுதல் நிம்மதியாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version