தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் இவரா? அனைவரும் ஆச்சரியம்!

Published

on

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதையும் பார்த்தோம்

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த நடவடிக்கைகளில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்

சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாத துறையில் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றம் ஏற்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயலாளர்களாக அதிகாரிகளான உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தலைமைச் செயலாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version