கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் இந்த நிறுவனமா? ஒட்டு மொத்த இந்தியர்கள் மகிழ்ச்சி!

Published

on

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை விவோ நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனிமேல் ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதிலாக டாடா நிறுவனம் இருக்கும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் என்றாலே அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரு மதிப்பு மரியாதை உண்டு என்பதும் குறிப்பாக டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொத்து முழுவதையும் ஒரு டிரஸ்ட் ஆக பதிவு செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் அதனால் தான் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அரசால் நடத்தப்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய போது அதனை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது இந்தியர்களின் மதிப்பிற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக இருக்க உள்ளது அனைத்து இந்தியர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version