கிரிக்கெட்

ஐபிஎல் 2022: பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?

Published

on

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 65வது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் அணிகள் எவை எவை என்பது குறித்த தகவல்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.

இதுவரை நடந்த போட்டிகளில் குஜராத் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணி பிளே ஆப் செல்வது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் மும்பை, சென்னை, ஐதராபாத், மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் முதலிடத்தில் குஜராத் இருக்கும் நிலையில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு தான் தற்போது கடும் போட்டி உள்ளது. ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் 16 புள்ளிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. டெல்லி மற்றும் பெங்களூர் அணி 14 புள்ளிகள் பெற்று 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.

இந்த நான்கு அணிகளில் ஏதேனும் மூன்று அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி என்பதும், ஒரு அணி வெளியேற்றப்படுவது உறுதி என்றும் தெரியவருகிறது. முதலிடத்தை குஜராத் பிடித்துவிட்ட நிலையில் இரண்டாவது மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் செல்லும் அணிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version