சினிமா செய்திகள்

யோகிபாவுடன் ஐபிஎல் வீரர் பேச உதவி செய்த நடராஜன்: வீடியோ வைரல்

Published

on

ஐபிஎல் போட்டியில் விளையாடும் முன்னணி வீரர் ஒருவர் நடிகர் யோகிபாபு உடன் பேசுவதற்கு யார்க்கர் கிங் நடராஜன் உதவி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’மண்டேலா’. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி அவர்கள் யோகிபாபு நடிப்பை பார்த்து மிரண்டு உள்ளார். இதனை அவர் தனது அணியின் சக வீரரான நடராஜனிடம் கூறியபோது யோகி பாபு என்னுடைய நண்பர் தான், அவரிடமே உங்களை பேச வைக்கிறேன் என கூறி தன்னுடைய மொபைலை எடுத்து யோகிபாபுவுக்கு வீடியோ கால் செய்தார்

அதன்பின் வீடியோ கால் கனெக்ட் ஆனவுடன் ஸ்ரீவத்ஸ் கோஸ்சுவாமியிடம் மொபைல் போனை கொடுத்து பேசச் செய்தார். இதுகுறித்த இதுகுறித்து ஸ்ரீவதஸ் கோஸ்சுவாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’மண்டேலா’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தேன். அந்த படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். குறிப்பாக யோகி பாபு நடிப்பு, என்ன ஒரு நடிப்பு! அருமையான கதை, அவர் நடராஜனின் நண்பர் என்று தெரிந்ததும் வீடியோகால் மூலம் என்னை யோகி பாபு உடன் பேச வைத்ததற்கு நன்றி’ என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version