Connect with us

கிரிக்கெட்

9வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே: ஃபினிஷிங் தோனி

Published

on

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான முதலாவது பிளே ஆப் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் லீக் சுற்றுகள் முடிவடைந்து நேற்று முதலாவது பிளே ஆப் சுற்று நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான முதலாவது பிளே ஆப் சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடந்தது.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்ததை அடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அபாரமாக விளையாடி 60 ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை பந்துவீச்சை பொறுத்தவரை அதில் ஹசில்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா, பிராவோ, மொயின் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டூபிளஸ்சிஸ் முதல் ஓவரிலேயே அவுட் ஆனாலும், ருத்ராஜ் மிக அபாரமாக விளையாடி 70 ரன்களும், அவருக்கு இணையாக ராபின் உத்தப்பா 63 ரன்களும் அடித்தனர்.

இந்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மொயின் அலி விக்கெட் விழுந்து உள்ளது. அதன் பின் இரண்டாவது பந்தில் விளையாட வந்த தோனி தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்தார். அதன்பின்னர் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து ஒரு மிகச்சிறந்த ஃபினிஷிங் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார். கடந்த சில போட்டிகளில் தோனி சரியாக விளையாடவில்லை என்றும், அவருடைய பெர்பாமன்ஸ் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் மொத்தம் 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள 12 ஆண்டுகளில் 9 முறை இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ருத்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாளை பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் சுற்றின் போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

ஜோதிடம்52 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!