கிரிக்கெட்

IPL – டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் வீரர்கள்

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், அணிகளுக்கு இடையிலான போட்டி சூடு பிடித்துள்ளது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மிகவும் வலுவாகத் தெரிகின்றன. இந்நிலையில் டெல்லி அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவும், ஆன்ரிச் நார்ட்ஜேவும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள். 

இதில் இந்தியாவுக்கு வரும்போது, ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றுதான் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிசிசிஐ நிலையான வழிகாட்டுதலின்படி ஒரு வீரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 5 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் 9 மற்றும் 10-வது நாளில் தொடர்ந்து நெகட்டிவ் வரவேண்டும். அதன்பின்புதான் அணிக்குள் சேர்க்கப்படுவார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஏற்கெனவே ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதனால் டெல்லி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version