கிரிக்கெட்

இந்தியாவில் கிடுகிடுவென பரவும் கொரோனா: IPL தொடரின் கிடுக்குப்பிடி விதிமுறைகள்!

Published

on

கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர், சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

முதலில் ஐபிஎல் தொடர்களில் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் அனுமதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் இல்லாமலேயே மொத்த ஐபிஎல் தொடரும் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் இங்கு நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய பயோ-பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

பயோ-பபுள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு முன் பல கட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். வீரர்கள் பயோ-பபுளில் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க தனி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 பயோ-பபுள் சூழல்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 8 பயோ-பபுள் சூழல்கள் வீரர்களுக்கும், 2 பயோ-பபுள் சூழல்கள் அணி நிர்வாகி மற்றும் உதவியாளர்களுக்கும், 2 பயோ-பபுள் சூழல்கள் ஊடகப் பிரிவினருக்கும் வழங்கப்படும். இந்த பயோ பபுளில் வீரர்கள் நுழைவதற்கு முன் 7 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்வது அவசியம். இந்த ஏழு நாட்களில் 2ம், 5ம், 7ம் நாட்களில் கொரானா பரிசோதனைகள் செய்யப்படும். ஒருவேளை வீரர்களுக்கு ஒரு தொற்று ஏற்பட்டால் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version