கிரிக்கெட்

இன்று நடக்கும் ஐபிஎல் ஏலம்.. சிஎஸ்கே யாரை குறிவைக்கும்? லிஸ்டில் உள்ள வீரர்கள் இவங்க தான்

Published

on

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மெகா எல்லாமாக இல்லாமல் மினி ஏலமாக இவை இருந்தாலும் கூட இம்முறை பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஐபிஎல் சீசன் மறக்க முடியாத ஒன்று. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே ப்ளே ஃஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் போனது கடந்த ஐபிஎல் சீசனில் தான். இதனால் சிஎஸ்கே இம்முறை அணியை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறது. கடந்தாண்டு தொடரில் இருந்து வெளியேறிய ரெய்னா மீண்டும் அணியுடன் இணைந்திருக்கிறார். ஆனால் அவருடைய பிட்னஸ் கேள்விக்குறிதான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஏலத்திற்காக கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனும்குமார், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதில் வாட்சன் மட்டும் ஒய்வு பெற்றுவிட்டார். இதனால் சிஎஸ்கேவிடம் இப்போது 19.90 கோடி கைவசம் உள்ளது. இவர்களுக்கு மாற்றாக சென்னை அணியால் ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 6 வீரர்களை இம்முறை ஏலத்தில் எடுக்க முடியும்.

Also Read: சென்னை டெஸ்டில் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்; வைரல் மீம் கன்டென்டாக மாறிய போட்டோ!

சென்னை அணியில் கடந்த சீசனில் தொடக்க வீரர் தான் பிரச்சனை என்பதால், வாட்சனுக்கு மாற்றாக வேறு ஒரு அனுபவ வீரரை வாங்க திட்டமிடலாம். அதன்படி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் டேவிட் மாலன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களில் ஒருவருக்கு குறிவைக்கலாம்.

அதே போல ரெய்னா நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. பிராவோவும் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். மிடில் ஆர்டரில் தோனி இருப்பது சென்னை அணிக்கு எப்போதும் பலம் தான் என்றாலும் கடந்த சீசன் முழுவதும் தோனி அத்தகைய அதிரடி ஆட்டங்கள் ஆடவில்லை என்பதால், ஒரு ஹிட்டர் பேட்ஸ்மேனுக்கு குறிவைக்க நினைக்கலாம்.

மேக்ஸ்வெல்

அப்படி அந்த இடத்துக்கு வெளிநாட்டு வீரரை குறிவைத்தால் பெரும்பாலும் மேக்ஸ்வெல் அந்த இடத்துக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. அதேநேரம் உள்நாட்டு வீரர்களில் யாரையும் குறிவைக்கலாம். கடந்த செய்யத் முஸ்தாக் அலி தொடரில் கோப்பையை கைப்பற்றிய தமிழக அணியில் இடம்பெற்ற பல தமிழக வீரர்களும் இந்த ஏலத்தில் குறிவைக்கப்பட உள்ளனர்.

சிஎஸ்கேவில் ஏற்கனவே ஜெகதீசன் இருப்பதால், பாபா அபரஜித், ஷாருக் கான் உள்ளிட்ட வீரர்களை அதிரடி பேட்ஸ்மேனுக்கான இடத்தில் சென்னை அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மற்றொரு யோசனையை சென்னைக்கு கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கை ரிலீஸ் செய்துள்ள நிலையில் அவருக்கு மாற்றாக மெயின் அலியை எடுக்கலாம் என கம்பீர் கூறியிருக்கிறார். அந்த அணியில் ஏற்கனவே லெக் ஸ்பின்னர்கள் மற்றும் இடதுகை ஸ்பின் பவுலர்களும் உள்ளனர். ஆனால் ஒரு ஆஃப் ஸ்பின் பவுலர் இருப்பது அணிக்கு நல்லது என்றும் கம்பீர் கூறியிருக்கிறார்.

இதனால் இன்று நடைபெறும் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை ஏலத்தில் எடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version