கிரிக்கெட்

ஐபிஎல் 2023: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி!

Published

on

2023 ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் சீசனின் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியில் மிரட்டிய மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுபுறம் தீபக் ஹூடா 17 ரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12 ரன் அடித்து அவுட் ஆனார்கள்.

லக்னோ 193 ரன்

அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 21 பந்தில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து, அதிரடி காட்டிய பதோனி 18 (7) ரன்களில் கேட்ச் ஆனார். முடிவில் குர்ணால் பாண்ட்யா 15 (13) ரன், கிருஷ்ணப்பா கவுதம் 6 (1) ரன்கள் எடுக்க லக்னோ அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது. டெல்லி அணியில் கலீல் அகமது மற்றும் சேட்டன் சகாரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் கண்டது.

பிரித்வி ஷா 12 ரன்களில் போல்ட் ஆக, அடுத்து களமிறங்கிய மிட்சல் மார்ஸ் (0) ரன் அடிக்காமலும், ஷர்பராஸ் கான் 4 ரன்னிலும் அடுத்தடுத்து மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து அதிரடி காட்டிய ரூசோவ் 30 (20) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரோவ்மேன் பவல் 1 ரன்னிலும், அமன் ஹக்கிம் கான் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனியாக போராடிய கேப்டன் டேவிட் வார்னர் 56 (48) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அக்ஷர் படேல் 16 (11) ரன்களில் ஆட்டமிழந்தார்.

லக்னோ வெற்றி

இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணியின் சார்பாக அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ அணி, லீக் சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

seithichurul

Trending

Exit mobile version