கிரிக்கெட்

ஐபிஎல் 2022 மெகா ஏலம்: வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் தெரியுமா?

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டி வீரர்கள் ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளப்படும், விளையாட்டு வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒரு ஐபிஎல் அணி, தங்களது முன்னாள் விளையாட்டு வீரர்கள் 4 பேரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு, 16 கோடி, 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்க வேண்டும்.

இதுவே 3 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 15 கோடி ரூபாய், 11 கோடி ரூபா, 7 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்க வேண்டும்.

இதுவே 2 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 14 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்கப்படும்.

ஒரு வீரரை மட்டும் தக்க வைத்துக்கொள்ள விரும்பினால் அவருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.

யாருக்கு அதிக சம்பளம் என்ற வரிசையை அணியின் நிர்வாகம் முடிவெடுக்கும்.

ஐபிஎல் அணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தாங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

பஞ்சாப் அணி ஒரு வீரரை கூட தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. புதிதாக ஒரு அணியை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு வீரரை கூட தக்க வைத்துக் கொள்ளாத ஐபிஎல் அணி 90 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கலாம். சென்ற ஆண்டு வரை இது 85 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டில் 5 கோடு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு அணி வீரரை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் ஐபிஎல் அணி 76 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் எடுக்கலாம்.

இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் ஐபிஎல் அணி 66 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 57 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் ஐபிஎல் அணி 48 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

Trending

Exit mobile version