கிரிக்கெட்
ஐபிஎல் 2022 போட்டிகளின் முழு அட்டவணை இதோ!
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணையை சற்றுமுன் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணையில் முதல் போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் கடைசி போட்டி மே 22ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகள் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்றும் அதன் அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது