கிரிக்கெட்

IPL2021- ஐபிஎல் ஏலப் பட்டியல்: இவர்களுக்கு இவ்வளவு விலையா? அதிர்ச்சி அளிக்கும் லிஸ்ட்!

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தங்களுக்குப் பிடித்தவர்களை ஐபிஎல் தொடரில் இருக்கும் அணிகள் தேர்ந்தெடுக்கும். இதில் சில ஷாக் கொடுக்கும் நீக்கங்களும் அமைந்துள்ளன. அதேபோல சிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை விலையும் தலை சுற்ற வைக்கிறது.

மொத்தம் ஏலத்துக்குத் தேர்வாகி இருக்கும் 292 வீரர்களில், 164 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 61 வீரர்களுக்கு மட்டுமே ஐபிஎல் அணிகளில் இடமிருக்கும். இதில் மிகவும் அதிக டிமாண்டு மற்றும் மூன்னணி வீரர்களுக்கு அடிப்படை ஏல விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 பேர் அந்தப் பட்டியலில் இருக்கின்றனர். அதில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மோயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் ப்ளெங்கெட், ஜேசன் ராய், ஷகிப் அல் ஹசன் மற்றும் மார்க் உட் ஆகியோர் இந்த டாப் ஏலப் பட்டியலில் உள்ளனர்.

பல இரண்டாம் நிலை வீரர்கள் இந்தப் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தாலும், மிக முக்கியமாக கிரிக்கெட் போட்டிகளுக்கும் கம்-பேக் கொடுத்த ஶ்ரீசாந்த், இறுதி ஏலப் பட்டியலில் இடம் பெறவில்லை.

அதேபோல ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஷான் மார்ஷ், கோரி ஆண்டர்சன் மற்றும் மார்னே மார்க்கல் போன்றோர் இந்த முறை ஏலத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாட முனைந்துள்ளனர்.

 

Trending

Exit mobile version