விளையாட்டு

நின்று காட்டிய ரெய்னா… வெளியேறிய மலிங்கா…ஜாக்பாட் அடித்த சஞ்சு சாம்சன்- ஐபிஎல் அப்டேட்ஸ்

Published

on

2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் ஏலம் தொடங்குவதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்தப் பட்டியலை ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னாவை விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கேப்டன் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மலிங்காவை அந்த அணி கைவிடுவதாக அறிவித்துள்ளது.

122 ஐபிஎல் ஆட்டங்களை ஆடி 4 கோப்பைகளைக் கைப்பற்ற உதவிய மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது விடுபட உள்ளார். ஐபிஎல் 2021 போட்டிகளில் இருந்து அணி வாரியாக  விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்கள்:

மும்பை இந்தியன்ஸ் அணி: மலிங்கா, குல்டர்நைல், பேட்டின்சன், மெக்லானகன், ரூதர்போர்ட், பல்வந் ராய், திக்விஜய் தேஷ்முக்.

சென்னை சூப்பர்கிங்ஸ்: முரளி விஜய், கேதார் ஜாதவ், மோனு சிங், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கிறிஸ் மோரிஸ், ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, இசுரு உதனா, டேல் ஸ்டெயின், சிவம் துபே , உமேஷ் யாதவ், பவன் நெகி, குர்கீரத் மான், பார்த்திவ் படேல்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: சஞ்சய் யாதவ், பி சந்தீப், பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், பிருத்விராஜ் ஆகியோரை விடுவித்துள்ளது.

கிங்ஸ் 11 பஞ்சாப்: மேக்ஸ்வெல், கருண் நாயர், ஹார்டஸ் வில்ஜோன், ஜகதீஷா சுசித், முஜீப் உர் ரஹ்மான், ஷெல்டன் காட்ரெல், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கவுதம், தாஜிந்தர் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: எம் சித்தார்த், நிகில் நாயக், சித்தேஷ் லாட், கிறிஸ் கிரீன், டாம் பான்டன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், டாம் கரன், ஓஷேன் தாமஸ், அங்கித் ராஜ்பூத், வருண் ஆரோன், ஷாஷாங்க் சிங், அனிருத் ஜோஷி, ஆகாஷ் சிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அலெக்ஸ் கேரி, கீமோ பால், சந்தீப் லாமிச்சேன், துஷார் தேஷ்பாண்டே, மோஹித் சர்மா.

Trending

Exit mobile version