கிரிக்கெட்

#CSKvsRR | சிஎஸ்கே சுழலில் வீழ்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Published

on

2021 ஐபிஎல் சீசனின் 12வது போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஃபாஃப் டு பிளெசிஸ் 33, மோயின் அலி 26, அம்பத்தி ராயுடு 27 என ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 188 ரன்களை எடுத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 35 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்து இருந்த போது ஜடேஜாவின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான தொடக்கத்தை அளித்தாலும், ஜடேஜா, மோயின் அலி சுழலில் வெக்கெட்களை இழந்து திணறியது. ஜோஸ் பட்லர், மனன் வஹோரா என்று இரண்டு முக்கிய தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார்.

மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான மோயின் அலி டேவிட் மில்லர், ரியான் பரக், கிரிஸ் மோரிஸ் விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணறடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோற்றது.

20 பந்துகளுக்கு 26 ரன்கள், 3 ஓவரில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய மோயின் அலிக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் இது தோனிக்கு 200வது ஆட்டம். சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு. இன்றைய தினத்தில் சிஎஸ்கே பதிவு செய்துள்ள வெற்றி, அந்த அணி ரசிகர்கள் இடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version