கிரிக்கெட்

2021 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா… தொடக்க நாளை அறிவித்த பிசிசிஐ..!

Published

on

ஐபிஎல் 2021-க்கான தொடக்க விழாவை அறிவித்துள்ளது பிசிசிஐ.

14-வது ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக ரஞ்சிக் கோப்பையை இந்த ஆண்டு நடத்தப் போவது இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ தனது 14-வது ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் உள்ள வான்கடே மைதானம், பர்போர்ன் மதானம், DY படீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம், மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 அல்லது ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் ஜூன் 6ம் தேதி போல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 போட்டிகளில் 8 ஐபிஎல் அணிகள் மட்டுமே மோத உள்ளன. 2022-ம் ஆண்டு முதல் தான் 9-வது அணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு அணிகளுக்கான முதற்கட்ட ஏலம் வருகிற பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version