கிரிக்கெட்

#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே!

Published

on

2021 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக காட்டியை அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் சென்னை அணி காட்டியுள்ளது. பேட்டிங்கில் பலமாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கட்டுப்படுத்த சென்னை அணி 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை 220 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் 42 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித்தார். டு பிளசிஸ் 60 பந்துகளுக்கு 95 ரன்க்அள் எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். 3வதாக பேட்டிங் செய்ய வந்த மோயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். தொடர்ந்து வந்த தல தோனி 8 பந்துகளுக்கு 17 ரன்கள் அடித்து இருந்த போது ருசேல் பந்தில் மார்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை மட்டும் சந்தித்து சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. சுபம் கில் சாஹர் பந்தில் லுங்கியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நிதிஷ் ரானா 12 பந்துகளுக்கு 9 ரன்கள் அடித்து இருந்த போது சாஹர் வீசிய பந்தில் தோனியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்கள் தொடர்ந்து சரிய, 6வது ஆக வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இருக்கும் போது லிங்கி பந்தில் lbw அவுட்டானார்,. அடுத்து விளையாடிய ருசேல், கும்மிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். ருசேல் 22 பந்துகளில் 54 ரன்கள் அடித்து இருக்கும் போது சாம் பந்தில் போல்ட் ஆனார். அடுத்து கும்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த 3 பவுலர்களும் டக் அவுட் ஆக, கும்மின்ஸ் மட்டும் 34 பந்துகளுக்கு 66 ரன்களை சேர்த்து இருந்தார். 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றுப்போனது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடளையும் எடுத்தார்.

சென்ற ஐபிஎல் தொடரில் சோபிக்காத சென்னை அணி இந்த முறை முதல் போட்டியை தவிர அடுத்த 3 போட்டிகளிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version