கிரிக்கெட்

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Published

on

அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.

முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.

ஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.

பின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version