வணிகம்

சென்னையில் ஐபோன் உற்பத்தி செய்ய ரூ.1500 கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்!

தைவானை சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஐபோன் மட்டுமில்லாமல் சியோமி, நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களைத் தயாரிக்கிறது.

Published

on

உலகின் மிகப் பெரிய ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யும் ஆர்டரை அளித்துள்ளது.

ஏற்கனவே பெங்களூரு பீனியாவில் ஐபோன் SE மற்றும் 6S உற்பத்தியை ஆப்பிள் செய்திருந்தாலும் அதில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. எனவே தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோனை ஃபாக்ஸ்கான் தயாரிக்க உள்ளது.

தைவானை சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஐபோன் மட்டுமில்லாமல் சியோமி, நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களைத் தயாரிக்கிறது.

சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்வது குறித்து டிசம்பர் மாதமே அறிவிப்புகள் வெளியானது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 முடிந்த பிறகு 1,500கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபோனை சென்னையில் உற்பத்தி செய்வதற்காக ஸ்ரீபெரம்பத்தூரில் புதிய உற்பத்தி ஆலை ஒன்றையும் ஃபாக்ஸ்கான் அமைத்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version