உலகம்

பச்சை நிறத்தில் புதிய ஆப்பிள் ஐபோன் 13: விலை என்ன தெரியுமா?

Published

on

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வரும் நிலையில் தற்போது பச்சை நிறத்தில் புதிய ஐஃபோன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐபோன் 13 சீரிஸ் பச்சை நிறத்திலும் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 புரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ஐபோன் 13 சீரிஸ் மாடல் பின்க், புளூ, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களிலும் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ள இந்த ஐபோன், நானோமீட்டர் ஸ்கேல் மெட்டாலிக் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மாடல்கள் சர்ஜிக்கல் கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட மேட் கிளாஸ் பேக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 69,900 முதல் ரூ. 1,29,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் பச்சை நிற ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 சீரிஸ் பச்சை நிற மாடலுக்கான முன்பதிவு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கும் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு விற்பனை மார்ச் 18 ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version