தமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் எரிவாயு விலையும் கடந்த சில வாரங்களாக உயர்ந்துகொண்டே இருந்தது என்பதும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 200 ரூபாய் சமையல் கேஸ் விலை உயர்ந்தது என்பதும் தெரிந்ததே.

இதனையடுத்து பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது சமையல் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபாய் 10 மட்டும் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல் படுத்தப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 2 மாதங்களில் ரூபாய் 200 உயர்த்திவிட்டு தற்போது வெறும் ரூபாய் 10 மட்டும் குறைக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் மீண்டும் அதிருப்தி அடைய தொடங்கி உள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version