இந்தியா

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Published

on

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் குறைந்த முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக “POST OFFICE” பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற திட்டம் முதலீட்டாளர்களுக்கு 15 ஆண்டுகளில் முதலீட்டு தொகையை இரட்டிப்பாக வழங்குவதோடு, 7.1% வட்டி வருமானத்தையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 முதல் அதிகபட்ச முதலீடாக ரூ. 1.5 லட்சம் வரை நடைபெறுகிறது. PPF கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்புகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

PPF கணக்கின் வட்டி வருமானம் ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, 1 நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெற முடியும். உதாரணமாக, நீங்கள் தற்போது மாதம் ரூ. 10,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால், அது 1 ஆண்டுக்கு பிறகு ரூ. 1.2 லட்சம் முதலீட்டு தொகையாக இருக்கும்.

15 ஆண்டுகளில், நீங்கள் மொத்தம் ரூ. 18 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள், ஆனால் வட்டி வருமானமாக ரூ. 13.56 லட்சம் கிடைக்கும். எனவே, எல்லாம் சேர்த்து மொத்த முதிர்வு தொகை ரூ. 31 லட்சம் கிடைக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version