தொழில்நுட்பம்

ஹானர் பேண்ட் 4 அறிமுகம்.!

Published

on

ஹுவாய் நிறுவனம் கடந்த வாரம் தனது புது ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஹானர் 8சி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பொழுது ஹானர் பேண்ட் 4 மாடலையும் இந்திய சந்தியில் அறிமுகம் செய்துள்ளது.

இன்னும் ஹானர் பேண்ட் 4 இன் விலை விபரங்களை ஹுவாய் நிறுவனம் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த புதிய ஹானர் பேண்ட் 4 மூன்று நிறத்தில் இந்திய சந்தையில் கிடைக்குமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா சந்தையில் இதற்கு முன்பே ஹானர் பேண்ட் 4 அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனா சந்தையில் ஹானர் பேண்ட் 4 வெறும் 199 யுவானில் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,100 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பேண்ட் 4, சிறப்பான 0.95′ இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் உடன் கூடிய 2.5டி கரவுடு கிளாஸ் டிஸ்பிளேயுடன் அறிமுகம்ஸ் செய்யப்பட்டுள்ளது. ட்ரு ஸ்லீப் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் பேண்ட் 4 உங்களின் இதயத்துடிப்பை மிக துல்லியமாக கணக்கிட்டுச் சொல்கிறது. ஹானர் பேண்ட் 4, உங்களின் கலோரி அளவு, நடைப்பயணம், நீச்சல் வேகம், தூக்கம், வாய்ஸ் கால்ஸ் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை சரியாய் சொல்கிறது. இந்த புதிய ஹானர் பேண்ட் 4 ப்ளூடூத் 4.2 இணக்கத்துடன் வருகிறது.

இத்துடன் கூடுதலாக ஹானர் பேண்ட் 4, வாட்டர் ரெஸிஸ்டண்ட் சான்று வழங்கப்பட பேண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சத்தங்களுடன் இணைந்து இயங்கும் ஹானர் பேண்ட் 4 வெறும் 23 கிராம் எடையைக் கொண்டுள்ளது. பிளாக், மிட்நைட் நேவி மற்றும் டாக்லியா பிங்க் நிறத்தில் கிடைக்கிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version