உலகம்

வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் அறிமுகம்.!

Published

on

கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் இணக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூகுள் அசிஸ்டன்ட் சேவையை பயன்படுத்தி கூகுள் ட்ரான்ஸ்லட் மூலம், கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் எந்த மொழியையும் உடனுக்குடன் நிகழ்நேரத்தில் மொழிமாற்றம் செய்து பயனருக்கு வழங்குகிறது. உடனுக்குடன் நிகழ்நேரத்தில் மொழிமாற்றம் செய்வது இந்த இயர் பட்ஸ்சின் சிறப்பம்சம்.

மொழி தெரியாத காரணத்தினாலே நம்மில் பலர் வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்த நிலையில், இந்த சேவை நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது. கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் உதவியுடன் வெளிநாட்டவர், முகம் தெரியாத யாராக இருந்தாலும் அவர்கள் என்ன மொழியில் பேசினாலும் உங்களால் அவர்களின் மொழியை உடனுக்குடன் மொழிபெயர்த்து கேட்க முடியும்.

கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ்-ஐ தொடர்ந்து Bose Quiet Control 35 II, Sony WI-1000X, Sony WH-1000XM2 மற்றும் Sony WH-1000XM3 ஆகிய ஹெடிபோன்களிலும் கூகுள் அசிஸ்டன்ட் சேவை வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் விற்பனைக்கு களமிறங்கவிருக்கும் இந்த கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ், அனைத்து ஆண்ட்ராய்டு பயன்ரகளுக்கும் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Trending

Exit mobile version