சினிமா செய்திகள்

மிரட்டும் வாட்ச்மேன் டீஸர்!

Published

on

ஜி.வி. பிரகாஷின் வாட்ச்மேன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

மதராசபட்டினம், தேவி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

த்ரில்லர் படமா அல்லது பேய் படமா என கெஸ் பண்ண முடியாத அளவுக்கு படத்தின் டீஸர் மிரட்டுகிறது. படத்தில் நாய் ஒன்றுக்கு முக்கிய ரோல் உள்ளது அதன் டைட்டிலிலேயே தெரிகிறது.

இது என்ன மாயம் படத்திற்கு பின்னர், ஜி.வி. பிரகாஷ் விஜய் படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

2.0 திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version