தமிழ்நாடு

உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சி: வேகமெடுக்கும் அதிமுகவின் பிரச்சாரம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான ஒரு சில கருத்து கணிப்புகளில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் உளவுத்துறை முதல்வருக்கு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளதாம். அந்த அறிக்கையில் இப்போதைக்கு திமுக தான் முன்னணியில் இருப்பதாகவும் அந்த கட்சிக்கு 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

உளவுத்துறையின் இந்த அறிக்கை காரணமாக முதல்வர் படு அப்செட்டில் இருக்கிறாராம். இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தை முடுக்கி விட அவர் திட்டமிட்டுள்ளார். அனைத்து அதிமுக நிர்வாகிகலுளும் அவர் அனுப்பியுள்ள செய்தியில் திமுகவினரின் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த முறை நாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

மேலும் தாராளமாக செலவு செய்யவும் நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த திமுகவும் முன்னைவிட சுறுசுறுப்பாக தற்போது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. உளவுத்துறையின் அறிக்கைபடி திமுக ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version