வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தல்

Published

on

குரூப் 1 தேர்வு தொடர்பாக, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டுப் பிப்ரவரி 19-இல் நடத்தப்பட்டது.

அதற்கான முடிவு ஜூலை 21-இல் வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 13-இல் தொடங்கி 15 வரை நடந்தது.

இதற்கான தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருகிறது. எனவே, தேர்வர்கள் அது குறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

மேலும் ஏமாற்றுவோர் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version