இந்தியா

இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

Published

on

இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது என்றும் அதற்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிகளை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘டிஜி யாத்ரா’ என்ற அமைப்பின் முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் முக அங்கீகாரம் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

முதல்கட்டமாக இந்த வசதியை கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, புனே ஆகிய மாநிலங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

விமான பயணிகளுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு விமான பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்

 

seithichurul

Trending

Exit mobile version