உலகம்

தலைவலியும் கொரோனாவின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது தெரிந்ததே.

சளி காய்ச்சல் இருமல் ஆகியவை கொரோனாவின் முக்கிய அறிகுறி என்று கூறி இருந்த நிலையில் தற்போது தலைவலி உள்பட மேலும் 5 அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் மேலும் 5 அறிகுறிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகியவை இருந்தால் கொரோனா பாதிப்பின் அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிகுறிகள் 8 வாரங்களுக்கு மேலாக ஒருவருக்கு இருந்தால் அவருக்கு கண்டிப்பாக கொரோனா இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியில் தற்போது தலைவலியும் சேர்ந்து உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தற்போது தோன்றியது அல்ல என்றும் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்று அரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version