இந்தியா

முதுநிலை மருத்துவ படிப்புக்கான INI-CET நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published

on

முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மே மாதம் 8ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற தகவல் www.aiimsexams.ac.in என்ற இணையதளத்தில் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் வகுப்புகள் தொடங்குவதும் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version