வணிகம்

எதிர்பார்த்ததை விட அதிக லாபம் மகிழ்ச்சியில் ‘இன்போசிஸ்’!

Published

on

2020-2021 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில், 25,927 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. லாபம் 16.6 சதவீதம் அதிகரித்து 5,197 கோடி ரூபாயாக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் மீண்டும் ஒஎரு நல்ல காலாண்டு லாபத்தை பெற்றுள்ளதாக அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சலீல் பரேக் தெரிவித்துள்ளார். டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள் அதிகம் கவர்ந்ததால், இந்த வளர்ச்சியை இன்போசிஸ் பெற்றுள்ளது. வான்கார்ட், டைம்லர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இன்போசிஸின் புதிய வாடிக்கையாளர்களாக வந்துள்ளன.

டாலர் வருவாய்:

இன்போசிஸ் நிறுவனத்தின் 3-ம் காலாண்டு டாலர் வருவாய் 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் டிஜிட்டல் வருவாய் மட்டும் 50 சதவீதம்.

ஊழியர்கள் வெளியேறுதல்

ஐடி சேவைகள் நிறுவனமான இபோசிஸில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவது 15.8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மூன்றாம் காலாண்டில் குறைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version