வணிகம்

இன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

Published

on

இன்போசிஸ் நிறுவனம் 2020-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில், நிகர லாபம் 20.5 சதவீதம் அதிகரித்து 4,845 கோடி ரூபாய் பெற்றுள்ளதா அறிவித்துள்ளது.

சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில், இன்போசிஸ் நிறுவனம் 4,019 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்து இருந்தது.

இன்போசிஸின் ஆண்டு வருவாய் 8.6 சதவீதம் அதிகரித்து, 24,570 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட்டாக 12 சதவீதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் சம்பள உயர்வு அளிக்க உள்ளதாகவும், 100% காலாண்டு போனஸ் வழங்கப்படும் என்றும், இந்த காலாண்டுக்கு என்று சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

இன்போஸிஸ் நிகர லாபம், வருவாய் அதிகரித்து இருந்தாலும், இன்றைய சந்தை நேர முடிவில் பங்கின் மதிப்பு 21.90 புள்ளிகள் சரிந்து 1,136.10 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version