தமிழ்நாடு

டாஸ்மாக் ஐந்து ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்குகிறதா? தகவல் அறியும் சட்டத்தில் தகவல்!

Published

on

கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஜரூராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் விற்பனை குறித்து சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் வந்தபோது டாஸ்மாக்கில் பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2021-11ஆம் ஆண்டில் ரூ.3.56 கோடியும், 2011-12ல் ரூ.1.12 கோடியும், 20212-13ல் ரூ.103.64 கோடியும், 2013-14ல் ரூ.64.44 கோடியும், 2019-20ல் ரூ.64.44 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காசிமாயன் அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் உயிரைப் பறிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை நஷ்டத்திற்கு ஏன் இயக்க வேண்டும் என்றும், நஷ்டமடையும் பல நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் மூடி வரும் நிலையில் நஷ்டமாகி வரும் டாஸ்மாக் கடையையும் மூட வேண்டியதுதானே என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு தமிழக அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version