இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மைத்தன்மை குறைந்துள்ளதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மைத்தன்மை குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொரோனாவால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வு மும்பையில் ஐஐடி, மருத்துவமனை ஒன்றுடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுடன் இனப்பெருக்கம் தொடர்புடைய புரோட்டீன்கள் குறைவாக இருப்பதாகவும் அது மட்டுமின்றி கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகரும் தன்மை குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

இதன் மூலம் மிதமான கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் குழந்தைப்பேறு விஷயத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த இன்னும் ஒரு சில ஆய்வுகள் செய்ய வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version