கிரிக்கெட்

#INDvsSL | இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா!

Published

on

#INDvsSL | இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்ற பெற்ற நிலையில், இரண்டாம் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. மூன்றாம் போட்டியில் யார் வெல்வார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவார்கள் என இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 2 பந்துகளுக்கு 1 ரன் எடுத்திருந்த நிலையில் மதுஷான்கா வீசிய பந்தில் டீ சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சுபம் கில், ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 16 பந்துகளுக்கு 35 ரன்கள் அடித்து இருந்த கருணா வீசிய பந்தில் மதுஷனாகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 36 பந்துகளுக்கு 46 ரன்கள் அடித்து இருக்கும் போது டீல் சில்வா வீசிய பந்தில் சுபம் கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ராகுல் திரிபாதி அவுட் உடன் களம் இறங்கிய சூரியகுமார் யாதாவ் 51 பந்துகளுக்கு 112 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடி வந்தார். ஹர்திக் பாண்டியா,, தீபக் ஹூடா இருவரும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்கள். அக்‌ஷர் படேல் 9 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்து கடைசி வரையில் அவுட் ஆகாமலிருந்தார். இந்திய அணி 20 ஓவர் இறுதியில் 5 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் எடுத்து இருந்தது.

இலங்கை அணிக்கு தில்ஷான் மடுஷான்கா 2 விக்கெட்களும் குசான், சாமிக, வானிது தலா 1 விக்கெட்களை எடுத்தார்கள்.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி முதலில் நிதானமாக அட்டத்தைத் தொடங்கினாலும் 10வது ஓவருக்கு பிறகு அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்து 16.4 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், தாசன் ஷானகா இருவரும் தலா 23 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களும், அர்ஷ்திப் சிங் 3 விக்கெகளும் (4 வைட் பந்துகள்), அக்சர் படேல் 1 விக்கெட்டும், உம்ரான் மாலில் 2 விக்கெட்களும், யுவேந்திர சாசல் 2 விக்கெட்களும் எடுத்து இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது அதிக ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது அக்‌ஷர் படேலுக்கு வழங்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் செய்த சாதனைகள்

20 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் 1500 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த 7வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனை செய்துள்ளார். சூர்யகுமார் – சுபம் கில் ஜோடி 3வது விக்கெட்டிற்கு 53 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்துள்ளன.

45 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் வேகமாக செஞ்சுரி அடித்த இரண்டாம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரோகித் ஷர்மா 35 பந்துகளில் செஞ்சுரி அடித்து முதலிடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version