கிரிக்கெட்

#INDvsENG | பந்தின் மீது எச்சில் தடவிய ஸ்டோக்ஸ்.. எச்சரித்த நடுவர்!

Published

on

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பந்தின் மீது பென் ஸ்டோக்ஸ் எச்சில் தடவியதைப் பார்த்த நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பொதுவாக கிரிக்கெட்டில் பந்து வீசும் போது, நன்கு சுழன்று செல்ல வேண்டும் என்பதற்காக அதை ஈரம் ஆக்க எச்சில் தடவ அனுமதிப்பார்கள். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் இவ்வாறு பந்தின் மீது எச்சில் தடவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் நேற்று இந்திய அணியின் முதல் இன்னிக்ஸ் பேட்டிங்கின் 12வது ஓவரை வீசிய பென் ஸ்டோக், பந்தின் மீது எச்சில் தடவினார். இதை கண்ட நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் பந்தின் மீது சானிடைசர் போட்டு துடைத்தனர்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எச்சில் துப்பியதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இந்த தவறு நேர்ந்தால், இங்கிலாந்து அணியின் 5 ரன்கள் அபராதமாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்தது. அடுத்து விளையாடத் தொடங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் ஷர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் ஆட்டாம் இழக்காமல் ஆடி வருகின்றனர்.

Trending

Exit mobile version