கிரிக்கெட்

INDvENG – “எனக்காடா விக்கெட் கீப்பிங் தெரியாது..!”- விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷப் பன்ட்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், தன் அசாத்திய கீப்பிங் திறமையால் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டிக்கான டாஸ் வென்ற இந்தியா, வெற்றி பெறும் எண்ணத்துடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் அதிரடி தொடக்க வீரர் ரோகில் சர்மா, சதமடித்து அசத்தினார். அதைப் போலவே துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர். இதனால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. 

இதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருகிறது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

https://www.bcci.tv/videos/149916/rishabh-pant-grabs-a-stunner

டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பன்ட், சரி வர விக்கெட் கீப்பிங் செய்வதில்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் தற்போது அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஓல்லி போப், சிராஜ் பந்தை லெக் சைடு அடிக்க முயல, அது பேட்டில் மெளிதாக பட்டு பின்னால் சென்றது. பவுண்டரிக்கு சென்றிருக்க வேண்டிய பந்தை பன்ட், ஒற்றைக் கையில் எக்கிப் பிடித்தார். இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தனக்கு பேட்டிங்கில் மட்டுமல்ல கீப்பிங்கிலும் திறமை இருக்கிறது என்பதை இதன் மூலம் காண்பித்துள்ளார் பன்ட்.

Trending

Exit mobile version