கிரிக்கெட்

INDvENG – முதல் டெஸ்டுக்கு முன்னர் கோலியின் கேஷுவல் பேட்டிங் பயிற்சி – வைரல்

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பிக்கிறது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு நாட்டு வீரர்களும் சென்னையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதனால் இங்கிலாந்து தொடரில் இந்தியா, உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தியா சார்பில், ரோகித், சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, பன்ட், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஷபாஸ் நதீம், இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர்.

டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் கோலி, மிக கேஷ்வலாக பேட் கூட கட்டாமல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அது குறித்தான வைரல் வீடியோ இதோ:

author avatar
seithichurul

Trending

Exit mobile version