கிரிக்கெட்

INDvENG – பும்ரா இந்திய மண்ணில் எடுத்த முதல் டெஸ்ட் விக்கெட்! #Video

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்கு முன்னர் வரை இங்கிலாந்து அணி, 67 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து ஓப்பன்ரகளில் ஒருவரான ரோரி பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்திருந்த போது, இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து 3வதாக களமிறங்கிய லாரன்ஸ், பும்ரா வீசிய பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதுவரை பும்ரா, பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவர் இந்திய மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவே. அந்த வகையில் அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் ஃபார்மட்டில் கைப்பற்றும் முதல் விக்கெட்டும் இதுவே. ஆகவே பும்ராவுக்கு இது மிகவும் நினைவுகூரத்தக்க விக்கெட்டாக அமைந்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 2 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதனால் இங்கிலாந்து தொடரில் இந்தியா, உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version