கிரிக்கெட்

INDvENG – “எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்!”- சர்ச்சையைக் கிளப்பும் ஜாக் கிராலி

Published

on

இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி, 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாக் கிராலி, அதிகபட்சமாக அரைசதம் விளாசினார். இந்தியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா அரசைதம் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் வகையில் மூன்றாவது அம்பயர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜாக் கிராலி.

இந்திய அணி பேட்டிங் செய்த போது, ரோகித் சர்மாவை ஸ்டம்பிங் செய்து அப்பீல் செய்தது இங்கிலாந்து. அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. அவர் ஒரு சில ஆங்கில்களில் இருந்து மட்டும் ஸ்டம்பிங்கை பார்த்து விட்டு, நாட்-அவுட் கொடுத்து விட்டார். இது சரியில்லை என்பது தான் இங்கிலாந்து அணியின் வாதம்.

இது பற்றி ஜாக் கிராலி, ‘இப்படியான முடிவுகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. நாங்கள் ஆட்டத்தில் தற்போது பின் தங்கியுள்ளோம். இதைப் போன்ற சமயங்களில் சில முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக மாற வேண்டும் என்று கருதுகிறோம். நான் ஸ்டம்பிங்கில் அவுட், நாட்-அவுட் என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஏன் இந்திய அணிக்கான அப்பீல் மட்டும் பல ஆங்கில்களில் இருந்து பார்க்கப்படவில்லை. அது தான் எனது கேள்வி’ என்று கேட்டுள்ளார். இது மிகப் பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.

காரணம், இந்தப் போட்டியில் மைதானத்தில் இருக்கும் நடுவர்களும், மூன்றாவது அம்பயரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தான் சர்ச்சையாகி உள்ளது.

 

Trending

Exit mobile version