கிரிக்கெட்

INDvENG – 3வது அம்பயர் முடிவால் வெடிக்கும் சர்ச்சை – அது அவுட்டா, இல்லையா?- ரோகித்தின் சதம் நியாயம் தானா..?

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில் விளையாடி வருகிறது. நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்தப் போட்டி தற்போது, சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், இன்று காலை போட்டித் தொடங்கியது முதல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர். தற்போது இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலியும், ஆல்-ரவுண்டர் அக்சர் படேலும் தற்போது களத்தில் உள்ளனர். இந்தியா, தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட 293 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, சதமடித்து ஃபார்முக்குத் திரும்பினார். இந்நிலையில் ரோகித், விளையாடும் போது ஒரு கட்டத்தில் இங்கிலாந்து சுழற் பந்து வீச்சாளர் மோயீன் அலியை எதிர் கொண்டார். அப்போது ரோகித், ஷாட் விளையாடாமல் பேடை வைத்து மோயீனின் பந்தைத் தடுத்தார். அதற்கு இங்கிலாந்து எல்.பி.டபள்யூ கேட்டது. களத்தில் இருந்த அம்பயர், நாட்-அவுட் கொடுக்க அந்த முடிவை ரிவ்யூ செய்தது இங்கிலாந்து.

மூன்றாவது நடுவர், ரீப்ளேக்கள் மூலம் மீண்டும் நடந்தவையை சரி பார்த்து விட்டு, நாட்-அவுட் என்று சொல்லி விட்டார். ஷாட் ஆடாமல் ஒரு பந்தை வெறும் பேட் வைத்துத் தடுத்தால் அதற்கு அவுட் கொடுக்கப்படும் என்பது தான் நடைமுறை. ரோகித், ஷாட் ஆடவில்லை என்று நினைத்து தான் அம்பயர் முடிவை ரிவ்யூ செய்தது இங்கிலாந்து. காணொலிகளில் வந்த ரிப்ளேகளிலும் ரோகித், ஷாட் ஆடவில்லை என்பது போலத் தான் தெரிந்தது. ஆனால், அம்பயரைப் போலவே மூன்றாவது நடுவரும் ரோகித்துக்கு நாட்-அவுட் கொடுக்க, சர்ச்சை வெடித்தது.

ரோகித்துக்கு இப்படி அவுட் கொடுக்காமல் இருந்தது தவறு என்றும், மூன்றாவது அம்பயரின் முடிவு சரியில்லை என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரோகித்தும் அதிரடி சதம் விளாசி, அது இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணமாக அமையலாம் என்பதனால் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்து வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version