Connect with us

கிரிக்கெட்

“சும்மா கிரவுண்ட குறை சொல்றத விடுங்க!”- இங்கி., வீரர்களை கழுவி ஊற்றிய சோயப் அக்தர்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் முடிந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது இந்தியா.

இந்தத் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற்றது. மூன்றாவது போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, ‘மைதானம் சரியில்லை. அது முழுவதும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது’ என்று கிரவுண்டை குறை கூறியது. இந்திய பேட்ஸ்மேன்களும் அந்த பிட்ச்சில் திணறியதால் இப்படியான விமர்சனங்கள் சர்ச்சையானது.

அதே நேரத்தில் நான்காவது டெஸ்டில் இந்திய வீரர்கள், பேட்டிங் பொளந்து கட்டினார்கள். இதனால் இங்கிலாந்து அணி மீது அதிக விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இங்கிலாந்தின் அணுகு முறை குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ‘ஒரு மைதானம் சரியில்லை என்றால் அதில் விளையாடும் எல்லோருக்கும் பிரச்னை ஏற்பட வேண்டும். ஆனால், குஜராத் புதிய மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

அந்த அணி ஒரே இன்னிங்ஸில் 365 ரன்களை எடுத்திருக்கிறது. டெஸ்டைப் பொறுத்தவரையில் இது நல்ல ரன் என்றே சொல்லலாம். ஆனால், தங்களுடைய திறமையை சரியாக வெளிப்படுத்தாமல் மைதானத்தை குறை கூறுவதில் இங்கிலாந்து வீரர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதனை ஏற்க முடியாது. இங்கிலாந்து வீரர்கள் மோசமாக ஆடிய அதே மைதானத்தில்தான் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். எனவே, மைதானங்களை குறை கூறுவதை இங்கிலாந்து வீரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 மணி நேரங்கள் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 மணி நேரங்கள் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!