கிரிக்கெட்

INDvENG – உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட்; ஸ்பெஷல்ஸ் என்ன?

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத், மொத்தேரா மைதானத்தில் நடக்கிறது.

மொத்தேரா மைதானம் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து, இப்போது தான் முதன் முறையாக கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியானது, பகல் இரவு ஆட்டமாக நடக்கும். பிங்க் நிறப் பந்து இந்தப் போட்டிக்காக பயன்படுத்தப்படும்.

மொத்தேரா கிரிக்கெட் மைதானத்தின் அதிகாரப்பூர்வ பெயர் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் ஆகும். உலகளவில் இரண்டாவது பெரிய மைதானமான இது, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்குகிறது. வெறுமனே பெரியதாக மட்டுமல்லாமல் அனைத்து வித உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்ளடக்கி இருக்கின்றது இந்த மைதானம்.

அகமதாபாத்தின் சபர்மதி நதிக்கரையில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டுளது. முதன் முதலாக இந்த மைதானத்தில் 1982 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு, இந்த மைதானத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் யோசனையை பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பழைய மைதானம் முழுவதும் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின. சுமார் 700 கோடி ரூபாய் செலவில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய மொட்டேரா மைதானம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1.10 லட்சம் பேர் அமர முடியும். மைதானத்தில் மொத்தம் 76 கார்ப்பரேட் பாக்ஸ் அறைகள், கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கம், க்ளப் ஹவுஸ், உணவகங்கள், ஜிம், விழா நடத்தும் அறை, நான்கு டிரெஸ்ஸிங் அறைகள், 6 பயிற்சி பிட்சுகள், 3,000 கார்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளன.

Trending

Exit mobile version