கிரிக்கெட்

INDvAUS | டிப் இல்ல ஆனா அவுட்டு… சர்ச்சையான டிம் பெய்ன் விக்கெட்!

Published

on

INDvAUS | இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா அணி 2 ரன் லீடிங்கில் மட்டுமே இருக்கிறது.

இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 326 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியே ரஹானே, சதமடித்து அசத்தினார். இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, கேப்டன் டிம் பெய்ன் விளையாட வந்தார். பெயின், 8 பந்துகள் பிடித்து 1 ரன் எடுத்திருந்தபோது, ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்ய வந்தார். ஜடேஜா வீசிய பந்தை விளையாட முயன்ற பெய்னால் அதை அடிக்க முடியவில்லை. பேட்டின் விளிம்பைத் தாண்டி விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டிடம் பந்து சென்றது. பேட் டிப்பில் பட்டது போல சத்தம் வரவே, இந்தியர்கள், விக்கெட்டுக்கு அப்பில் செய்தனர். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்காத காரணத்தால் ரிவ்யூவுக்கு சென்றனர். அதில் இந்தியாவுக்குச் சாதகமாக முடிவு வந்தது. ஹாட் ஸ்பாட்டில் எட்ஜுக்கான எந்த சுவடும் இருக்கவில்லை, ஆனால் ஸ்னிக்கோவில் எட்ஜ் பட்டது போல் தெரியவே, பெயினுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த சர்ச்சையான முடிவால் பெயின், அதிக கோபத்தோடு வெளியேறினார்.

Trending

Exit mobile version