கிரிக்கெட்

INDvAUS – சிட்னியில் சிராஜ் மீது நிறவேறி தாக்குதல்; பரபரப்பான சூழலால் நிறுத்தப்பட்ட போட்டி!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறி எண்ணத்துடன் சாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து போட்டி சில நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 312 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதன் மூலம் போட்டியை வெல்ல இந்தியாவுக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது இந்திய அணி, 85 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்த நிலையில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது, முகமது சிராஜ், ஃபைன் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது சில ரசிகர்கள், அவரை நிறவெறி எண்ணத்துடன் சாடியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த சிராஜ், நடுவர்களிடம் அது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நிறவெறித் தாக்குதலில் ஈடுபட்ட 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து உள்ளூர் போலீஸ் வெளியேற்றியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் போட்டி நடந்தது. ஆஸ்திரேலிய பயணத்தில், இதற்கு முன்னதாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சிராஜுக்கு நிறவெறித் தாக்குதல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைப் போன்ற சம்பவம் மைதானத்திலேயே நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறது.

 

 

Trending

Exit mobile version