கிரிக்கெட்
INDvAUS – விழுந்து புரண்டு கேட்ச் தவறவிட்ட ரிஷப் பன்ட் – வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கைக்கு வந்த கேட்ச்களை தவறவிட்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வில் புகோஸ்கி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இதில் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, புகோஸ்கி நிலைத்து விளையாடி அரைசதம் கடந்து, களத்தில் உள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Pant gives Puc a life! #AUSvIND pic.twitter.com/PwhpHuJI4D
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1 – 1 என்ற ரீதியில் சமநிலை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தங்கள் முழுத் திறனை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் மட்டும் புகோஸ்கியின் கேட்ச்சை இரண்டு முறை தவறவிட்டுள்ளார் பன்ட். முதல் முறை சுலபமாக கைக்க வந்த கேட்ச்சை தவறவிட்ட பன்ட், இரண்டாவது முறை கடினமான கேட்ச்சை விழுந்து புரண்டும் பிடிக்காமல் நழுவ விட்டார். இதனால் நெட்டிசன்களின் அர்ச்சனைக்கு அவர் ஆளாகியுள்ளார்.
“The third umpire is looking for conclusive evidence to say the ball has bounced … and in this particular case the fingers weren’t underneath the ball from the keeper.” – Simon Taufel #AUSvIND pic.twitter.com/zhroJTRu53
— 7Cricket (@7Cricket) January 7, 2021
குறிப்பாக, அடுத்தப் போட்டியில் பன்ட்க்கு பதிலாக ரிடிமன் சஹா மீண்டும் ஆடும் 11 பேரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்ட் தவறவிட்ட இரண்டு கேட்ச்சுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா சார்பில் இன்றைய ஆடும் 11 பேரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், இடம் பெறவில்லை. இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கும் 11 வீரர்கள் விவரம் வருமாறு:
அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, அனுமா விகாரி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சயினி (அறிமுகம்).
A rollercoaster of emotions for Will Pucovski! Initially given out, but on closer inspection he’s recalled to the crease! #OhWhatAFeeling@Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/WgT5lCRjAE
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
ஆஸ்திரேலியாவிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு கடந்த இரண்டு போட்டிகளில் சரியான ஓப்பனிங் தராத தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், அணிக்கு கம் பேக் கொடுத்துள்ளார். அவரைப் போலவே 22 வயதேயான வில் புகோஸ்கியும் அணியில் இடம் பெற்றுள்ளார்.