கிரிக்கெட்

INDvAUS – வெறித்தனமான வேகத்தில் வந்த பவுன்சர்கள்… மலையென அசராமல் நின்ற புஜாரா – இது தைரியத்தின் உச்சம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, ‘தி வால்’ என்று பெயரெடுத்தவர் செத்தேஷ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான தடுப்பாட்டத்தில் வல்லவர் புஜாரா. அதை நான்காவது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தில் திறம்பட வெளிக்காட்டி வருகிறார் புஜாரா.

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தியாவுக்கு, இலக்கு வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் வெற்றி பெறும் கனவோடு தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா.

இதுவரை ரோகித் சர்மா 4 ரன்களுக்கும், சுப்மன் கில் 91 ரன்களுக்கும், கேப்டன் அஜிங்கியே ரஹானே 24 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளார்கள். களத்தில் தற்போது அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட் மற்றும் தடுப்பாட்ட கிங் புஜாரா ஆகியோர் உள்ளனர். பன்ட் 46 பந்துகளுக்கு 16 ரன்னிலும், புஜாரா 187 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். இந்த இருவர் களத்தில் வெகு நேரம் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி வசப்படும்.

இன்றைய நாளில் இன்னும் 29 ஓவர்கள் பாக்கியிருக்கின்றன. அதில் இந்தியா 134 ரன்கள் எடுத்தாக வேண்டும். எப்படியும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்தியா, வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கையிலெடுத்த ஆயுதம் பவுன்சர். விடாமல் புஜாராவுக்கு பவுன்சர்களைப் போட்டு அவரை நோகடித்தனர். பவுன்சராக வீசப்பட்ட பல பந்துகள் புஜாராவின் உடலிலும், ஹெல்மட்டிலும் தான் பட்டன. ஒரு முறை ஹெல்மெட் டேமேஜ் ஆகும் அளவுக்கு இருந்தது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மூர்க்கமான பவுன்சர்கள். புஜாராவின் தடுப்பாட்டம் இந்தப் போட்டியில் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

புஜாரா பவுன்சர்களை சமாளித்த விதம் குறித்தான வீடியோ:

seithichurul

Trending

Exit mobile version