கிரிக்கெட்

#INDvAUS – முதல் டெஸ்டிலேயே டக்-அவுட் ஆன பிரித்வி ஷா… வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், 20 ஓவர் தொடரை இந்திய அணியும் வென்றது குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியுள்ளது.

பிங்க் நிற பந்து மூலம் இந்த டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தப் பந்தில் அட்டகாசமாக பவுலிங் செய்யக் கூடியவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க். அவர் ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தை இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரித்வி ஷாவுக்கு வீசினார். ஆஃப் ஸ்டிம்புக்கு வெளியில் சென்ற அந்தப் பந்தை வலிந்து டிஃபண்டு செய்தார் ஷா. அது இன்சைடு எட்ஜாகி ஸ்டம்புகளைப் பதம் பார்த்தன.

இந்தப் போட்டியில் பிரித்வி ஷாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஓப்பனராக களமிறக்கப்பட வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்திய அணி நிர்வாகம், அதை மதிக்காமல் ஷாவுக்கு வாய்ப்புக் கொடுத்தது. அவர் அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் வெளியேறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக ட்விட்டரில் நெட்டிசன்ஸ் பிரித்வியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

அதில் சில பதிவுகள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version